Indian Entru Solvom - இந்தியன் என்று சொல்வோம்






 

இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்து கொள்வோம்
இது எங்கள் பாரதம் - 4
இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்து கொள்வோம் - 2
நம் மொழிகள் வேறாகினும்
நாம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாகினும்
நம்மில் வேற்றுமை இல்லையே - 2
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம் - 3
இது எங்கள் பாரதம் - 4
1. யுத்தங்கள் மாறணும்
சமாதானம் பிறக்கணும்
ஜாதி வேற்றுமை இல்லாமல்
ஒன்றாய் வாழணும் - 2
இளைஞர் சமுதாயம் இன்றே எழுந்து
நீதியை நாட்டணும் - 2
நம் தேசத்தை உயர்த்தணும்
                         - எங்கள் பாரதம்

2. சோம்பலை போக்குவோம்
நம் வளத்தை பெருக்குவோம்
நீதி நேர்மையை கடைப்பிடித்து
ஒழுக்கத்தை நாட்டுவோம் - 2
அறிவியல் அறிஞர்கள் மாபெரும் ஞானிகள்
கொண்ட நம் நாடிது - 2
வளமிக்க பெரும் நாடிது
இறைவன் கொடுத்த தேசத்தை
வளமாய் காத்திடுவோம்
கயவர்கள் கையில் தேசம் போக
துளியும் விடமாட்டோம் - 2
                         - எங்கள் பாரதம்

NONE




Song Description: Tamil Christian Song Lyrics, Indian Entru Solvom - இந்தியன் என்று சொல்வோம்.
KeyWords: Christian Song Lyrics, John Jebaraj, Indian Entru Solvom lyrics.