Ummai nambi vandhen - உம்மை நம்பி வந்தேன்






 

உம்மை நம்பி வந்தேன்
நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல - 2
வெறுங்கையாய் நான் கடந்து வந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் -2

ஏல் - எல்லோகே - 3
உம்மைத் துதிப்பேன் - நான்

காயப்பட்டு நின்றேன்
கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்

வேண்டினோரெல்லாம்
விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்

NONE




Song Description: Tamil Christian Song Lyrics, Ummai nambi vandhen - உம்மை நம்பி வந்தேன்.
KeyWords: Christian Song Lyrics, John Jebaraj, Ummai nambi vandhen lyrics.