Arimugam Illaa - அறிமுகம் இல்லா






 

அறிமுகம் இல்லா என்னிடம் வந்து
அறியணையேற்றி திட்டம் தந்து
என்னை அறிமுகம் செய்தவரே
எனக்கு பின்னணியாய் நிற்ப்பவரே - 2

எல் ஷடாய் சர்வ வல்லவர்
என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே
எல் ஷடாய் சர்வ வல்லவர்
என்னை பெருக செய்த பெரிய தெய்வமே - 2

எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்
எந்தன் பாதையில் வந்தனரே - 2
ஆனாலும் உம் தயவால் எனக்கு
அறியணை வாழ்வை தந்தவரே
                                           - எல் ஷடாய்

என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்
குழியில் விட்டு சென்றவரே
தூக்கி எறிந்தோர் கண்கள் முன்பே
அறியணை வாழ்வை தந்தவரே - 2
                                           - எல் ஷடாய்

NONE




Song Description: Tamil Christian Song Lyrics, Arimugam Illaa - அறிமுகம் இல்லா.
KeyWords: Christian Song Lyrics, John Jebaraj, Arimugam Illaa lyrics.